/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இடியும் நிலையில் பள்ளிக் கட்டடம் உயிர் பயத்தில் மாணவர்கள்
/
இடியும் நிலையில் பள்ளிக் கட்டடம் உயிர் பயத்தில் மாணவர்கள்
இடியும் நிலையில் பள்ளிக் கட்டடம் உயிர் பயத்தில் மாணவர்கள்
இடியும் நிலையில் பள்ளிக் கட்டடம் உயிர் பயத்தில் மாணவர்கள்
ADDED : ஜன 02, 2026 06:58 AM
திருமங்கலம்: திருமங்கலம் ஒன்றியம் ஆலம்பட்டி கிராமத்தில் நடுநிலை பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 95 மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 7 பேர் பணியாற்றுகின்றனர்.
இப்பள்ளி கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில் கட்டட சுவரின் மேற்பகுதி சேதமடைந்துள்ளது. தற்போது நான்கு வழிச்சாலை இந்த பள்ளி அருகில் அமைக்கப்படுவதால், அப்பணிகள் காரணமாகவும் பள்ளி கட்டடத்தில் சேதம் ஏற்படுகிறது. இதனால் எப்போது இடிந்து விழுமோ என உயிர் பயத்தில் மாணவர்களும், ஆசிரியர்களும் வகுப்பறையில் அமர்ந்து உள்ளனர்.
நான்கு வழிச்சாலைக்காக காம்பவுண்ட் சுவர் முற்றிலும் அகற்றப்பட்டது. தற்போது வரை காம்பவுண்ட் சுவர் கட்டப்படவில்லை. இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்களை சீரமைக்கவும், காம்பவுண்டு சுவர் கட்டவும் திருமங்கலம் பி.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அதிகாரிகள் பலமுறை பள்ளியை பார்வையிட்டுச் சென்ற பின்பும் பணிகள் தொடங்க எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் உடனே பள்ளி கட்டடங்களை சீரமைப்பதுடன், காம்பவுண்ட் சுவரையும் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

