தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/பள்ளி கட்டடம் பழுது:அலுவலர் ஆஜராக உத்தரவு

பள்ளி கட்டடம் பழுது:அலுவலர் ஆஜராக உத்தரவு

பள்ளி கட்டடம் பழுது:அலுவலர் ஆஜராக உத்தரவு


UPDATED : அக் 13, 2026 07:06 PM

ADDED : அக் 13, 2026 05:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 07:06 PM ADDED : அக் 13, 2026 05:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: தஞ்சாவூரில் அரசு உதவி பெறும் பள்ளி கட்டடம் பழுதடைந்துள்ளதாக தாக்கலான வழக்கில், அங்கு ஆய்வு அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தஞ்சாவூர் கல்வி மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் ஆஜராகி விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

தஞ்சாவூர் செந்தில்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு: தஞ்சாவூர் மானோஜியப்பா தெருவில் டி.கே.ஆர்., அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளி உள்ளது. பழமையான இக்கட்டடம் ஆபத்தான நிலையில் உள்ளது. பொதுப்பணி, வருவாய், தீயணைப்பு, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்களை அருகிலுள்ள பாதுகாப்பான வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அஸ்வின் ராஜசிம்மன் ஆஜரானார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பள்ளியில் இதுவரை எத்தனை முறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, அதனடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தஞ்சாவூர் கல்வி மாவட்ட துவக்க கல்வி அலுவலர் இன்று (அக்.,14) ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us