ADDED : ஆக 12, 2024 03:38 AM
கருத்தரங்கு
உசிலம்பட்டி: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரியில் நுண்ணுயிரியல், உயிரித்தொழில்நுட்பம், மருந்து அறிவியலில் சமீபத்திய வளர்ச்சி குறித்து 2 நாள் பன்னாட்டு கருத்தரங்கம் துவக்கவிழா முதல்வர் ஜோதிராஜன் தலைமையில் நடந்தது. துணை முதல்வர் தென்றல் முன்னிலை வகித்தார். இணைப் பேராசிரியர் சுரேஷ் வரவேற்றார்.
ஒருங்கிணைப்பாளர் இணைப் பேராசிரியர் மணிகண்டன், மதுரை சாய் பவுண்டேஷன் இயக்குனர் செந்தில்குமார் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர் ஓமன் பல்கலை பேராசிரியர் சுந்தரவடிவழகன் செயற்கை நுண்ணறிவுத் துறை வளர்ச்சியினால் ஏற்படும் வளர்ச்சிகள் பேசினார். பேராசிரியர்கள் ஜெயலட்சுமி, கவிதா, திருச்செல்வி, ரமேஷ்பாண்டி, ரவிச்சந்திரன், செந்தில்குமார், பால்பாண்டி, மாசிமலர், விவேக், நிருபன், சுபாஷ், அலுவலர்கள் விமல், சஞ்சய் மற்றும் வேதியியல், பொருளாதாரத்துறை மாணவர்கள் பங்கேற்றனர். உடற்கல்வி இயக்குனர் ராஜசேகர் நன்றி கூறினார்.
சர்வதேச கருத்தரங்கு
பெருங்குடி: சரஸ்வதி நாராயணன் கல்லுாரி இயற்பியல் துறை சார்பில் சர்வதேச கருத்தரங்கு முதல்வர் சந்திரன் தலைமையில் நடந்தது. துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சரவணகுமார் வரவேற்றார். ஹைட்ரஜனை எரிபொருளாக எவ்வாறு மாற்றுவது என்ற தலைப்பில் சீனா பல்கலை இணைப்பேராசிரியர் சுந்தரம் சந்திரசேகரன், மீள் திறன் மின் தேக்கி செய்முறை மற்றும் பயன்பாடு என்ற தலைப்பில் காந்திகிராமம் பல்கலை பேராசிரியர் முரளிதரன், பைசோ எலக்ட்ரிக் சென்சார்களின் அதிர்வு மற்றும் மாறும் அழுத்த உணர்வு என்ற தலைப்பில் இஸ்ரோ விஞ்ஞானி முருகன், பொருட்களின் முன்னேற்றம் என்ற தலைப்பில் பேராசிரியர்கள் ராஜ்மோகன், முனீஸ்வரன் பேசினர். 110 பேர் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். பேராசிரியர்கள் சங்கரநாராயணன், பிரேம்குமார், செண்பக பாலகிருஷ்ணன், நாராயணமூர்த்தி, சர்வேஸ்வரன், நித்தியா, முருகலட்சுமி ஏற்பாடுகள் செய்தனர். துறைத் தலைவர் மினிமாலா நன்றி கூறினார்.
ரத்த தான முகாம்
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை வடமேற்கு ரோட்ராக்ட் கிளப், அரசு மருத்துவமனை ரத்தவங்கி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். ரோட்டரி கவர்னர் ராஜா கோவிந்தசாமி, கல்லுாரி செயலாளர் விஜயராகவன் துவக்கி வைத்தனர். தலைவர் ராஜகோபால், துணைத் தலைவர் ஜெயராம், உதவி செயலாளர் ராஜேந்திரபாபு, பொருளாளர் ஆழ்வார்சாமி முன்னிலை வகித்தனர். சுயநிதிப்பிரிவு இயக்குநர் பிரபு, ரோட்டரி செயலாளர் சவுந்தர், ஒருங்கிணைப்பாளர் ராகுல் சர்மா, பழனிகுமார் கலந்து கொண்டனர். 205 மாணவர்கள் ரத்தம் வழங்கினர். மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் சுதர்சன் நன்றி கூறினார்.
திறன் மேம்பாட்டு பயிற்சி
வாடிப்பட்டி: பொட்டுலுப்பட்டி காந்திஜி ஆரம்பப் பள்ளியில் நிறுவனர் பொன்னுத்தாய் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி மாணவர்களின் தனித்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் 3 நாட்கள் நடந்தன. பள்ளி செயலாளர் நாகேஸ்வரன் தலைமை வகித்தார். கவுன்சிலர் கீதா, சமூக ஆர்வலர்கள் செல்வராஜ், குப்புசாமி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் வெங்கடலட்சுமி வரவேற்றார். ஸ்டார் நண்பர்கள் அறக்கட்டளை குருசாமி துவக்கி வைத்தார். பள்ளிக்குழு தலைவர் தனபாலன் தனித்திறன் குறித்து விளக்கினார். நாடக ஆசிரியர் செல்வம், களிமண் விரல்கள் கலைக்கூட பயிற்சியாளர்கள் எழில், ரக்சனா ஓரிகாமி நாடகம், பாடல்கள் நடனம், வர்ணம் தீட்டுதல் காகித அட்டை, கைவினை பொருட்கள் உருவாக்குதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ஆசிரியர் எஸ்தர் டார்த்தி நன்றி கூறினார்.
மறு சீரமைப்புக்கூட்டம்
திருமங்கலம்: போல்நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் பள்ளிமேலாண்மைக் குழு மறுசீரமைப்புக் கூட்டம் நடந்தது. திருமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலர் செல்வி தலைமை வகித்தார். வளமைய மேற்பார்வையாளர் சரவணன், ஆசிரியப் பயிற்றுநர் பிரசாத் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை ரோஜா வரவேற்றார். ஆசிரியை அனிதா அனைத்து உறுப்பினர்களையும் உறுதிமொழி எடுக்க உதவினார். பள்ளி மேலாண்மைக் குழுவில் முன்னாள் மாணவர்கள் 4 பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டு 24 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரியைகள் சுகன்யா, அய்யரம்மாள் செய்திருந்தனர். ஆசிரியை தனலட்சுமி நன்றி கூறினார்.
வேலைவாய்ப்பு முகாம்
உசிலம்பட்டி: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரி, பி.கே.எம்., அறக்கட்டளை, உசிலம்பட்டி வளர்ச்சி மையம், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், எக்விடாஸ் அறக்கட்டளை, லயன்ஸ் சங்கம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. எம்.எல்.ஏ., அய்யப்பன், கல்லுாரி முதல்வர் ஜோதிராஜன், தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய உறுப்பினர் செயலாளர் ஜெயராமன், அறக்கட்டளை சின்னன் ஒருங்கிணைப்பாளர் பொன்ராம் பங்கேற்றனர். 100க்கும் மேற்பட்டவர்களை 45 நிறுவனங்கள் தேர்வு செய்து பணி நியமன ஆணை வழங்கின.
குழுத்தலைவர் தேர்வு
மேலுார்: கூத்தப்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் தலைமையில் நடந்தது. குழுத் தலைவராக பஞ்சரத்தினம், துணைத் தலைவராக தவமலர் மற்றும் 24 உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்டனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் கீதா மற்றும் சிறப்பு ஆசிரியர் டேனியல் தனசீலன் கலந்து கொண்டனர். ஆசிரியர் பாலுச்சாமி நன்றி கூறினார்.
பொறுப்பேற்பு
உசிலம்பட்டி: கட்டளைமாயன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது. பார்வையாளராக வட்டாரக் கல்வி அலுவலர் தேவி கலந்து கொண்டார். தலைமை ஆசிரியர் பொற்செல்வன் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட 16 உறுப்பினர்கள் பதவி ஏற்றனர். குழுத் தலைவராக லட்சுமி தேர்வு செய்யப்பட்டார். ஆசிரியர் அன்பழகன் நன்றி கூறினார்.