sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பள்ளி, கல்லுாரி செய்திகள்

/

பள்ளி, கல்லுாரி செய்திகள்

பள்ளி, கல்லுாரி செய்திகள்

பள்ளி, கல்லுாரி செய்திகள்


ADDED : ஜன 28, 2024 05:08 AM

Google News

ADDED : ஜன 28, 2024 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்லுாரியில் பள்ளி மாணவர்கள்

சோழவந்தான்: திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் பள்ளி மாணவர்களுக்கான கல்லுாரி வெளிப்பாடு நிகழ்வு முதல்வர் வெங்கடேசன் தலைமையில் நடந்தது. செயலர் சுவாமி வேதானந்த, குலபதி அத்யாத்மானந்த முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் கார்த்திகேயன் வரவேற்றார்.

இளங்கலை படிப்புகள், அரசு தனியார் நிறுவனங்கள் வழங்கும் உதவித்தொகை திட்டங்கள், போட்டி தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டிகுமார் விளக்கினார். 3ம் ஆண்டு மாணவர் வெங்கடேசன் கல்லுாரி மற்றும் இதர செயல்பாடு அனுபவங்களை பகிர்ந்தார். அரசஞ்சண்முகனார், ஆலங்கொட்டாரம் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். உதவி பேராசிரியர்கள் ரமேஷ்குமார், ராஜ்குமார், சதீஷ்பாபு, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

ரூ. 5.46 லட்சம் கல்வி உதவித்தொகை

திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி மாணவர்களில் அனைத்து பாடங்களிலும் தேர்வு பெற்று, தாய் அல்லது தந்தை இல்லாத 36 பேருக்கு ரூ. 5.46 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

ஜெயராம் பேக்கரி பங்குதாரர் விஜயராகவன், ராமலட்சுமி அறக்கட்டளை சார்பில் மன்னர் திருமலை நாயக்கரின் 441 வது பிறந்தநாள் விழாவோடு இந்நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார்.

தமிழ் உயராய்வு மைய தலைவர் காயத்ரிதேவி வரவேற்றார். உதவி பேராசிரியர் மல்லிகா அறிமுக உரையாற்றினார். தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், பொருளாளர் ஆழ்வார் சாமி, உதவி செயலாளர் ராஜேந்திரபாபு, சுயநிதிப் பிரிவு இயக்குநர் பிரபு கலந்து கொண்டனர். பேச்சாளர் இந்திரா ஜெயச்சந்திரன் பேசினார். உதவி பேராசிரியர் திருஞானசம்பந்தம் தொகுத்துரைத்தார். உதவி பேராசிரியர் தேவி பூமா நன்றி கூறினார்.

கல்வித் திருவிழா

மதுரை: விரகனுார் வேலம்மாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் தொழில்நுட்பக் கல்வித் திருவிழா நிறுவனர் முத்துராமலிங்கம் தலைமையில் நடந்தது. துணை நிறுவனர் சுரேஷ் முன்னிலை வகித்தார். முதல்வர் ரோஷிலா, ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

வேலைவாய்ப்பு கருத்தரங்கம்

ஊமச்சிகுளம்: யாதவர் மகளிர் கல்லுாரியில் கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன் துறை, தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம், கருத்தரங்கம் நடந்தது. தலைவர் அருண் போத்திராஜ் தலைமை வகித்தார்.

செயலாளர் இந்திராணி, முதல்வர் புஷ்பலதா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக எச்.சி.எல்., மதுரை இயக்குநர் திருமுருகன் சுபராஜ் பங்கேற்றார். அமெரிக்கா விப்ரோ சீனியர் திட்டமேலாளர் ஷியாம் சுந்தர், அன்னை தெரசா மகளிர் கல்லுாரி கம்ப்யூட்டர் துறை பேராசிரியர் கவிதா ஆகியோர் போட்டி தேர்வுகள் குறித்து பேசினர்.

ஏற்பாடுகளை பேராசிரியைகள் விஜயசங்கரி, பூமாதேவி, கவிதா, சின்னா, ராஜசங்கீதா, காவிகாஸ்ரீ செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us