ADDED : ஜன 30, 2024 07:25 AM
பள்ளி ஆண்டு விழா
பேரையூர்: அத்திப்பட்டி ராமையா நாடார் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. செயலாளர் மாரியப்பன் வரவேற்றார். தலைவர் கிருபாநிதி தலைமை வகித்தார். வியாபாரிகள் தொழிற்சங்க செயலாளர் ஸ்ரீதர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முதல்வர் கற்பகமலர் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். ஒருங்கிணைப்பாளர் சுமதி வாழ்த்தி பேசினார். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றோர், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றோருக்கு சிறப்பு பரிசுகளை ஸ்ரீதர் வழங்கினார். துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.
மாணவிகளுக்கு ஹாக்கி மட்டை
திருமங்கலம்: கப்பலுார் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் ஹாக்கி போட்டியில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் மாணவிகளுக்கு மதுரை சமூக ஆர்வலர் ஜெயா, இருபது ஹாக்கி மட்டைகளை பரிசாக வழங்கினார். தலைமை ஆசிரியர் லலிதா தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் கண்ணன், முன்னாள் துணைத் தலைவர் சரவணகண்ணன், உடற்கல்வி ஆசிரியர் நல்லமாயன், ஹாக்கி பயிற்சியாளர் நடராஜன், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கம்
எழுமலை: இங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரலாறு, பொருளாதாரம், புவியியல் மன்றங்கள் சார்பாக 'தமிழர்களின் நாகரிகம்' என்ற கருத்தரங்கம் தலைமையாசிரியர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடந்தது. மாணவர் வாசு கண்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக குற்றாலம் நாட்டுப்புற கலை அகழ் வைப்பக தொல்லியல் அலுவலர் சக்திவேல் தமிழர்களின் வாழ்வியல், வாழ்ந்த காலங்கள், இடங்கள், சான்றுகள் குறித்து பேசினார். ஆசிரியர்கள், மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். மாணவர் ஈஸ்வரன் நன்றி கூறினார்.