ADDED : பிப் 01, 2024 04:18 AM
பயிற்சி முகாம்
மதுரை: சமூக அறிவியல் கல்லுாரி, தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம் சார்பில் சமூகப்பணி கல்வியாளர்களுக்கான மூன்று நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது. முதல் நாளில் கல்லுாரிச் செயலாளர் தர்மசிங் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக போலீஸ் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் பங்கேற்றார். முதல்வர் ஜெயக்குமார் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் நிஷாந்த் பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார். உதவிப்பேராசிரியர் மீனலோசினி நன்றி கூறினார்.
அறிவியல் கண்காட்சி
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப் பிரிவு கணினி அறிவியல் துறை, தகவல் தொழில்நுட்ப துறை, கணினி பயன்பாட்டு துறை, செயற்கை நுண்ணறிவு துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான தொழில்நுட்ப கலை, அறிவியல் கண்காட்சி 'டெக் கேம்பஸ்' நடந்தது. கல்லுாரி தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். முதல்வர் ராமசுப்பையா, பிரபு முன்னிலை வகித்தனர். செயலாளர் விஜயராகவன் துவக்கி வைத்தார். 30க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 700 மாணவர்கள் பங்கேற்றனர். கணினி அறிவியல் துறை தலைவர் தேவிகா, தகவல் தொழில்நுட்ப துறை தலைவர் கார்த்திகா, கணினி பயன்பாட்டு துறை தலைவர் முத்துலட்சுமி, செயற்கை நுண்ணறிவு துறை தலைவர் வாசுகி ஆகியோர் ஏற்பாடுகள் செய்தனர். பேராசிரியர்கள் வனிதா, ஹேமாவதி, பவானி ஒருங்கிணைத்தனர்.
தொல்லியல் பயிலரங்கம்
வாடிப்பட்டி: டி.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் மரபு அறக்கட்டளை மதுரை கிளை சார்பில் கல்வெட்டியல், தொல்லியல் பயிலரங்கம் நடந்தது. தலைமை ஆசிரியர் சந்திரன் வரவேற்றார். குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லுாரி பேராசிரியர் சிவராமகிருஷ்ணன், தமிழ் பல்கலை பேராசிரியர் துளசேந்திரன், ராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டுக்கள், தொல்லியல் குறித்த தகவல்களை மாணவர்களிடம் பகிர்ந்தார். தொல்லியல் துறை வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களையும், அதற்கான படிப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. பயிலரங்க நோக்க உரையை உலக சாதனை நல்லாசிரியர் சுலைகா பானு விளக்கினார். ஆசிரியர் சேகர் நன்றி கூறினார்.
மாணவர்களுக்கு விழிப்புணர்வு
அழகர்கோவில்: மதுரை மாவட்ட போலீஸ் சமூகநீதி மனித உரிமைகள் துறை சார்பில் அழகர்கோவில் சுந்தரராஜா உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தலைமையாசிரியர் செல்வராஜ் தலைமை வகித்தார். எஸ்.ஐ.,க்கள் கிருஷ்ணபாண்டி, ரவிக்குமார் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக இளஞ்சிறார் நீதிக்குழும உறுப்பினர் பாண்டியராஜா பங்கேற்றார். உயர்கல்வியால் கிடைக்கும் வேலைவாய்ப்பு, குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள், போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினர். எஸ்.ஐ.,க்கள் கஸ்துாரி, ரத்தினம், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். புள்ளியியல் ஆய்வாளர் வில்வபதி நன்றி கூறினார்.
இலவச சைக்கிள்
உசிலம்பட்டி: டி.இ.எல்.சி., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசின் சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் மார்க்ரெட் கிரேசிலி தலைமையில் எம்.எல்.ஏ., அய்யப்பன் 275 மாணவிகளுக்கு வழங்கினார். அரசு மேல்நிலைப்பள்ளியில் 102 மாணவ, மாணவிகளுக்கும் வழங்கப்பட்டது.
மருத்துவ விழிப்புணர்வு
திருமங்கலம்: அன்னை பாத்திமா கலை அறிவியல் கல்லுாரியின் ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் துறை, மதுரை ஜாரா பல் மருத்துவமனை சார்பில் பல் மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடந்தது. முதல்வர் அப்துல் காதிர் தலைமை வகித்தார். தலைமை டாக்டர் அபாக் மற்றும் மருத்துவர் குழுவினர் பயிற்சி அளித்தனர். ஏற்பாடுகளை துறை தலைவர் சவுபியா பானு, பேராசிரியர்கள் பொன்மயில், சசிகலா செய்திருந்தனர்.