ADDED : பிப் 13, 2024 04:12 AM

கல்லுாரிகளுக்கு இடையிலான கலைப்போட்டி
மதுரை: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் சமூகப் பணித்துறை நடத்திய கல்லுரிகளுக்கு இடையேயான கலைப்போட்டிகள் நடந்தன. 35க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் இருந்து 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மூன்றாம் ஆண்டு மாணவி பிரியதர்ஷினி வரவேற்றார். நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்து 2ம் ஆண்டு மாணவர் பாலவிஷ்ணு பேசினார். முதல்வர் ராம சுப்பையா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக செயலாளர் விஜயராகவன் பங்கேற்றார். தலைவர் ராஜகோபால் கலைநிகழ்ச்சி குறித்து பேசினார். இயக்குநர் பிரபு, துறைத்தலைவர் ராமச்சந்திரன் பங்கேற்றனர். உதவி பேராசிரியர்கள் சிலம்பரசன், டயானா வின்சில்லா ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிகழ்ச்சியை உதவி பேராசிரியர்கள் கண்மணி, கிருஷ்ணவேணி, மரியா ஜஸ்டினா, ஹரிணி, சுபா பிரபா, கார்த்திகாயினி ஒருங்கிணைத்தனர். மாணவர் ராஜேந்திரபிரசாத் நன்றி கூறினார். மதுரை காந்தி என்.எம்.ஆர். சுப்புராமன் கல்லுாரி முதலிடம் பெற்று கோப்பையை வென்றது. 2வது இடத்தை அருளானந்தர் கல்லுாரி பெற்றது.
மாணவர்களின் ஆய்வு கண்காட்சி
திருப்பரங்குன்றம்: மதுரை நகர், பொது இடங்களை மக்கள் வளர்ச்சிக்காக சீரமைப்பது குறித்து தியாகராஜர் பொறியியல் கல்லுாரி கட்டடக்கலைத்துறை மாணவர்களின் வடிவமைப்புக் கண்காட்சி, கருத்தரங்கு நடந்தது. தலைவர் ஹரி தியாகராஜன் தலைமை துவக்கி வைத்தார். முதல்வர் பழனிநாதராஜா முன்னிலை வகித்தார். துறைத் தலைவர் ஜினு லுாயிஷிதா கிட்ச்லி வரவேற்றார். எம்.பி. வெங்கடேசன் பேசினார். 400 மாணவர்களின் வடிவமைப்புகள் இடம்பெற்றிருந்தன. பல்வேறு கல்லுாரிகள், பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்.
பள்ளி ஆண்டு விழா
சோழவந்தான்: அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா தலைமை ஆசிரியை தீபா தலைமையில் நடந்தது. ஆசிரியை பிரசன்னகுமாரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கலை நிகழ்ச்சி நடந்தது. தேர்வில் சாதித்த மாணவிகளுக்கு பரிசுகளை பேரூராட்சி தலைவர் ஜெயராமன் வழங்கினார். தொழிலதிபர் சின்ன பாண்டி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முருகானந்தம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் தமிழ் இலக்கியா மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
விவேகானந்த ஜெயந்தி
சோழவந்தான்: திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் விவேகானந்த ஜெயந்தி விழா பள்ளி கல்வித்துறையின் தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ முருகன் தலைமையில் நடந்தது. குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற என்.சி.சி. என்.எஸ்.எஸ்.,மாணவர்களுக்கு திருச்சி திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன தலைவர் சுவாமி சுத்தானந்த, முதல்வர் நியமனந்த பரிசு வழங்கினர். மாலை விவேகானந்த ஜெயந்தி விழா தபோவன செயலர் ஸ்த்யாந்த, பள்ளி செயலர் பரமானந்த, கல்லுாரி செயலர் வேதாபந்த, ஸ்ரீமத் அத்யாத்மானந்த, திருபுவன வாசல் விவேகானந்தர் பள்ளி செயலர் சுவாமி அட்சரானந்த முன்னிலை வகித்தனர். முதல்வர் வெங்கடேசன், துணை முதல்வர் கார்த்திகேயன் முதன்மையர் ஜெயசங்கர் அகத்தர ஒருங்கிணைப்பாளர் சதீஷ்பாபு பேசினர். தமிழ்த்துறை தலைவர் ராமகிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
விளையாட்டு விழா
சோழவந்தான்:திருவேடகம் விவேகானந்த கல்லுாரி 53ம் ஆண்டு மற்றும் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா நடந்தது. பழைய மாணவர் சுரேஷ் கண்ணன் முன்னிலையில் மாணவர்கள் ஒலிம்பிக் உறுதிமொழி ஏற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் பாண்டி, உடற்கல்வி இயக்குநர் நிரேந்தன் வழங்கினார். பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் ஆண்டறிக்கை வாசித்தார். முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார். திருச்சி திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன தலைவர் சுவாமி சுத்தானந்த, உப தலைவர் நியமானந்த, பள்ளி செயலர் சத்யானந்த சுவாமி அத்யாத்மனந்த பரிசு வழங்கினர்.
கட்டடங்களுக்கு பூமி பூஜை
அவனியாபுரம்: அரசு உயர்நிலைப்பள்ளியில் நம்ம பள்ளி, நம்ம ஊரு பள்ளி திட்டத்தின்கீழ் சிங்கப்பூரில் வசிக்கும் திலீப் பாபு ரூ. 31 லட்சம் மதிப்பீட்டில் 3 கழிப்பறை கட்டடங்கள் கட்டவும், 5 கம்ப்யூட்டர்கள் வாங்கவும் நிதி வழங்கினார். புதிய கட்டடங்களுக்கான பூமி பூஜை நடந்தது. தலைமை ஆசிரியர் சத்தியபாமா தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் லதா வரவேற்றார். திருநகர் முன்னாள் பேரூராட்சி தலைவர் பலராமன், ஆசிரியர்கள் பங்கேற்றனர். திலீப்பாபு கூறுகையில், ''எனக்கு கல்வி கொடுத்தது தமிழகம் தான். அதனால் திருநகர் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்ட ரூ. 1.40 கோடி வழங்கினேன். தற்போது அவனியாபுரம் அரசு பள்ளிக்கு நிதி வழங்கியுள்ளேன்'' என்றார்.
உற்பத்தி திறன் வார விழா
திருப்பரங்குன்றம்: தேசிய உற்பத்தி திறன் கவுன்சில் வர்த்தகம், தொழில் அமைச்சகத்தின், மதுரை உற்பத்தி திறன் கவுன்சில் சார்பில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் உற்பத்தி திறன் வார விழாவின் துவக்க விழா, பொருளாதார வளர்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவின் பங்கு என்ற தலைப்பில் நடந்தது. தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், பொருளாளர் ஆழ்வார்சாமி, முதல்வர் ராமசுப்பையா முன்னிலை வகித்தனர். கவுன்சில் தலைவர் ராஜேந்திரபாபு அறிமுக உரையாற்றினர். செயலாளர் ஜெகன்மோகன், சுப்புராஜ், உற்பத்தி திறன் வார சேர்மன் சவுந்தரராஜன் பேசினர். பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.
தொழுநோய் விழிப்புணர்வு
மதுரை: டி.கல்லுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கே.ஆர். கலை, அறிவியல் கல்லுாரியில் தேசிய தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிமுதல்வர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. வட்டார சுகாதாரஆய்வாளர் தங்கப்பாண்டி சிறப்பு விருந்தினராகபங்கேற்றார். தொழுநோயின் அறிகுறிகள், பரவும் முறைகள் அதற்கான சிகிச்சை முறைகளும் குறித்து விளக்கப்பட்டது.