ADDED : பிப் 16, 2024 05:40 AM
வர்த்தக கண்காட்சி
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப்பிரிவு வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை சார்பில் வர்த்தக கண்காட்சி துவங்கியது. தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன் துவக்கி வைத்தார். பொருளாளர் ஆழ்வார்சாமி, முதல்வர் ராமசுப்பையா, இயக்குநர் பிரபு, துறைத்தலைவர் நாகசுவாதி முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள் ராஜாமணி, திவ்யசிந்து, பாரதி, மஞ்சுளா, நந்தினீஸ்வரி, பாக்கியலட்சுமி, சுப்பிரமணியராஜா, பிரடி பிளெஸன், தினேஷ் குமார், சாவித்திரி ஒருங்கிணைத்தனர். வீட்டு உபயோகப் பொருட்கள், ஆட்டோ மொபைல்ஸ், ஆர்கானிக் பொருட்கள் முதல் உணவுப் பொருட்கள் வரை மாணவர்களின் தயாரிப்புகள் கண்காட்சி இடம்பெற்றன. பிற கல்லுாரி மாணவர்களும், மக்களும் கலந்துக் கொண்டனர். இன்றும்(பிப்.,16) கண்காட்சி காலை 8:30 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம்.
வேலைவாய்ப்பு முகாம்
மேலுார்: கிடாரிப்பட்டி லதாமாதவன் கல்வி நிறுவனங்கள் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. 75க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 26 மாணவர்களை ரிகுன் மேனுபேக்சர் நிறுவனத்தினர் தேர்வு செய்தனர். செயல் அலுவலர்கள் முத்துமணி, மீனாட்சிசுந்தரம், காந்திநாதன், முதல்வர்கள் வரதவிஜயன், முருகன் உள்ளிட்டோர் பாராட்டினர். ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு அலுவலர்கள் வெங்கடேசன், டீன் ஹேமலதா செய்திருந்தனர். பி.ஆர்.ஓ., பிரபாகரன் நன்றி கூறினார்.
விழிப்புணர்வு சொற்பொழிவு
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு சொற்பொழிவு நடந்தது. தலைவர் மோதிலால் தலைமை வகித்தார். செயலாளர் குமரேஷ், பொருளாளர் பாஸ்கர், நிர்வாக குழு உறுப்பினர்கள் பன்ஷிதர், வெங்கடேஸ்வரன், முன்னிலை வகித்தனர். முதல்வர் ஸ்ரீனிவாசன் வரவேற்றார். கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ராம்பிரசாத் அறிமுக உரையாற்றினார். வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஷியாம் சுந்தர் பேசினார். வேலை வாய்ப்பு அலுவலர் பேராசிரியர் ஜெயந்தி நன்றி கூறினார்.