ADDED : மார் 20, 2024 06:15 AM
விண்வெளி மைய சுற்றுலா
மதுரை: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரியில் இயற்பியல் துறையின் ஸ்கைவாக் மன்றம் சார்பில் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு மாணவியர் சுற்றுலா சென்றனர்.
ஏற்பாடுகளை முதல்வரும், மன்ற ஒருங்கிணைப்பாளருமான கவிதா செய்திருந்தார். ராக்கெட் ஏவுதளம், விண்வெளிக்கு அனுப்பும் நடைமுறைகள், செயல்பாடுகள் குறித்து மாணவியர் கேட்டறிந்தனர்.
விழிப்புணர்வு ஊர்வலம்
மதுரை: வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி சார்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு ஊர்வலத்தை சி.இ.ஓ., கார்த்திகா துவக்கி வைத்தார்.
தொடக்க கல்வி டி.இ.ஓ., சுப்பாராஜூ, உதவி திட்ட அலுவலர் சரவணமுருகன், வட்டார கல்வி அலுவலர்கள் ஜான் கென்னடி அலெக்சாண்டர், ஜோஸ்பின் ரூபி, ஆசிரியர் பயிற்றுநர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். புதிதாக சேர்க்கையான மாணவர்களுக்கு மாலை அணிவித்து, அவர்களை மேளதாளத்துடன் ஆசிரியர்கள் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.
பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பங்கேற்றனர். தலைமையாசிரியர் செல்வகுமரேசன், ஆசிரியர்கள் ஜேக்கப், கவிதா, நாகேஸ்வரி ஏற்பாடு செய்தனர்.
சர்வதேச கருத்தரங்கு
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி ஆங்கிலத் துறை சார்பில் இயற்கை, கலாசாரம், இலக்கியத்தில் தற்கால கண்ணோட்டம் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது. முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், துணைத் தலைவர் ஜெயராம், உதவி செயலாளர் ராஜேந்திர பாபு, பொருளாளர் ஆழ்வார்சாமி, சுயநிதிப்பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். பேராசிரியர் சரோஜா வரவேற்றார். ஆராய்ச்சியாளர்கள் 225 பேர் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். ஆங்கில துறை தலைவர் தனலட்சுமி ஒருங்கிணைத்தார். பேராசிரியர் ரதி நன்றி கூறினார்.
கலை விழா
மதுரை: சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் வணிகவியல் கணினி பயன்பாட்டுத்துறை (சுயநிதிப்பிரிவு) சார்பில் மாநில அளவிலான கலை விழா போட்டி நடந்தது. முதல்வர் ராஜேந்திரன் பேசினார்.
சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜ் பல்கலை ஓய்வு பெற்ற பேராசிரியர் விஜயதுரை பங்கேற்றார். சாம்பியன் பட்டத்தை சவுராஷ்டிரா கல்லுாரியும், 2ஆம் இடத்தை அமெரிக்கன் கல்லுாரியும் பெற்றது. பேராசிரியர்கள் ரமேஷ் பாண்டி, அழகுகணபதி, ஷோபனாதேவி, அஜித்குமார் பங்கேற்றனர்.

