ADDED : பிப் 21, 2025 05:45 AM
முத்தமிழ் மன்ற விழா
வாடிப்பட்டி: அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இளங்கோ முத்தமிழ் மன்றம் சார்பில் இலக்கிய மன்ற விழா நடந்தது. தலைமை ஆசிரியர் திலகவதி தலைமை வகித்தார். மன்ற செயலாளர் புலவர் சங்கரலிங்கம், பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் ரங்கசாமி முன்னிலை வகித்தனர். ஆசிரியை ராணி வரவேற்றார். 100 சதவீதம் வருகை பதிவு செய்த மாணவிகளுக்கு நடிகர் அஜய்ரத்தினம் பரிசு வழங்கினார். கண்ணதாசன் இலக்கிய பேரவை தலைவர் பொன் கலைதாசன், இளங்கோ முத்தமிழ் மன்ற ஆலோசகர் தங்கராஜ், உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகன் உட்பட பலர் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியை பிரேமா நன்றி கூறினார்.
இலக்கிய மன்ற விழா
மதுரை: செந்தமிழ்க் கல்லுாரியின் முன்னாள் மாணவர் சங்கம், இளங்கோ முத்தமிழ் மன்றம் சார்பில் இலக்கிய மன்ற விழா நடந்தது. நான்காம் தமிழ்ச் சங்கச் செயலாளர் மாரியப்பமுரளி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் சாந்திதேவி வரவேற்றார். நடிகர் அஜய்ரத்னம் பேசுகையில், ''பார்வையாளர்களாக இருக்கும் மாணவர்கள் விருந்தினராக மேடையில் அமர்வதே வெற்றி. படிப்பு, உழைப்பு, சரியான திட்டமிடல் இருந்தால் வெற்றி எளிதில் வசமாகும்'' என்றார். துணை முதல்வர் சுப்புலட்சுமி நன்றி கூறினார். தமிழாசிரியர் ஆறுமுகப் பெருமாள் தொகுத்து வழங்கினார். மன்றத் தலைவர் சங்கரலிங்கம், செயலாளர் சண்முக ஞானசம்பந்தன், ஆலோசகர்கள் சாவித்திரி, பாலசுப்பிரமணியன், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழிப்புணர்வு முகாம்
உசிலம்பட்டி: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. முதல்வர் தென்றல் தலைமை வகித்தார். பாலியல் குற்றத்தடுப்பு பிரிவு  கூடுதல் எஸ்.பி., ராமகிருஷ்ணன், உசிலம்பட்டி டி.எஸ்.பி., சந்திரசேகரன், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, மகளிர், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குழந்தை திருமணம், தடுக்கும் வழிமுறைகள் குறித்து பேசினர். காவலன் செயலி மூலம் எளிதாக புகார் செய்யலாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழிப்புணர்வு ஊர்வலம்
சோழவந்தான்: திருவேடகம் விவேகானந்த கல்லுாரி என்.எஸ்.எஸ்.,மாணவர்கள் சார்பில் தச்சம்பத்தில் 7 நாள் சிறப்பு முகாம் நடந்தது. பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு மற்றும் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு தரும் வகையில் மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. முதல்வர் வெங்கடேசன் துவக்கி வைத்தார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் அசோக்குமார், ரமேஷ்குமார், ரகு, ராஜ்குமார், தினகரன், உதவி திட்ட அலுவலர்கள் செல்வராஜ், எல்லை ராஜா, அருள்மாறன் பங்கேற்றனர்.
பூமி பூஜை
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பாவேந்தர் பாரதிதாசன் தெருவில் ரூ. 4.90 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது. மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா, உதவி கமிஷனர் பார்த்தசாரதி, பொறியாளர்கள் பங்கேற்றனர். மண்டல அலுவலகத்திற்கு பின்புறம் ரூ.9.50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கழிப்பறையை சுவிதா திறந்து வைத்தார்.

