ADDED : செப் 20, 2024 05:36 AM
மதுரை : மதுரை விளாங்குடி ராயல் வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி, பெத்தானியாபுரம் ராயல் பப்ளிக் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. ரயில்வே டி.எஸ்.பி., பொன்னுசாமி, கண் டாக்டர் ஸ்ரீனிவாசன், மாநகராட்சி தி.மு.க., செயற்குழு உறுப்பினர் ஜெயராம் பங்கேற்றனர்.
மாணவர்கள் சிலம்பம், யோகா, தற்காப்பு கலை, ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். மாலையில் நடந்த ஆண்டு விழாவில் நடிகர்கள் புகழ், தங்கதுரை பங்கேற்று மாணவர்களுக்கு அறிவுரைகளை நகைச்சுவை வடிவில் வழங்கினர்.
மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி நிர்வாகி ராஜாராம், தாளாளர் சகிலாதேவி, இயக்குனர்கள் தீபிகா பிரேம் குமார், கெவின் குமார், மகிமா, முதல்வர்கள் முத்துராஜ், பிரியதர்ஷினி, ஜெயந்தி, துணை முதல்வர் அருள் பிரகாஷ், விருந்தினர் பிரேம் குமார், விக்னேஷ், பி.ஆர்.ஓ., சுகுணா, ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.