/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜாலிக்காக வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வந்த பள்ளி மாணவர்கள் கைது
/
ஜாலிக்காக வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வந்த பள்ளி மாணவர்கள் கைது
ஜாலிக்காக வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வந்த பள்ளி மாணவர்கள் கைது
ஜாலிக்காக வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வந்த பள்ளி மாணவர்கள் கைது
ADDED : ஜூலை 24, 2025 05:29 AM
மதுரை : மதுரையில் ஜாலிக்காக வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வந்த பள்ளி மாணவர்கள் 5 பேரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.
மதுரை கூடல்புதுார், திருப்பாலை, அண்ணாநகர், அய்யர்பங்களா, தல்லாகுளம் பகுதியில் 3 நாட்களாக 6 வீடுகளின் மீது சிலர் கல்லெறிந்து ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது இரு டூவீலர்களில் வந்த 5 பேர் கல்லெறிந்து விட்டு செல்வது தெரிந்தது.
டூவீலரின் பதிவெண்களை கொண்டு விசாரித்தபோது, பள்ளி மாணவர்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்தது. விசாரணையில் அவர்கள் ஒத்துக்கொண்டதை தொடர்ந்து அண்ணாநகர், புதுார் பகுதிகளைச் சேர்ந்த 17 வயதுள்ள பிளஸ் 2 முடித்த மாணவர்கள் 5 பேரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது: மாணவர்கள் 5 பேரும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். நண்பர்களான இவர்கள் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கிறார்கள். தற்போதுதான் பிளஸ் 2 முடித்துள்ளனர்.
இதில் 2 பேர் கல்லுாரியில் முதலாமாண்டு சேர தயாராக உள்ளனர். மற்ற மூவரும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன் அண்ணாநகரில் நாய் ஒன்றின் மீது இவர்கள் கல் எறிந்தபோது அது ஒரு வீட்டின் ஜன்னல் கண்ணாடி மீது பட்டு உடைந்தது. அதிர்ச்சியடைந்து வீட்டில் உள்ளவர்கள் வெளியே வந்து பார்த்தனர்.
அவர்கள் பதட்டத்தை ரசித்த இவர்கள், இதேபோல் மற்றவர்களையும் பதட்டமடைய செய்ய வேண்டும் என எண்ணினர்.
தினமும் அதிகாலை இரு மாணவர்கள் தங்கள் தந்தை டூவீலர்களில் மற்ற மூவரை அழைத்துக்கொண்டு விளையாட செல்லும்போது ஏதாவது ஒரு வீட்டின் ஜன்னல் கண்ணாடி மீது கல் வீசி உடைத்து வந்துள்ளனர்.
விளையாட்டாகவும், ஜாலிக்காகவும் செய்ததாக ஒப்புக்கொண்டனர். இளைஞர் நலகுழுமத்திடம் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவ்வாறு கூறினர்.