UPDATED : அக் 22, 2026 04:41 PM
ADDED : அக் 22, 2026 04:37 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு செல்லும் வாகனங்களும், தனியார் வாகனங்களும் ஊருக்குள் செல்ல ரயில்வே மேம்பாலத்தை பயன்படுத்துகின்றன. பாலத்தின் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டன. இரவில் டூவீலரில் செல்வோர் விழுந்து காயமடைந்தனர்.
திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளி தலைவர் சரவணன், செயலாளர் கண்ணன் வழிகாட்டுதல்படி தலைமை ஆசிரியர் ஆனந்த் தலைமையில், என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவர்கள் பள்ளங்களை சீரமைத்தனர்.
