/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அடிக்கடி மின் துண்டிப்பு பள்ளி மாணவர்கள் அவதி
/
அடிக்கடி மின் துண்டிப்பு பள்ளி மாணவர்கள் அவதி
ADDED : ஏப் 15, 2025 06:44 AM
பேரையூர்: அரசு பொதுத் தேர்வு, தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இறுதியாண்டுத் தேர்வு நடந்து வருகிறது. பொதுத்தேர்வு நடக்கும் காலங்களில் முழுமையாக மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் பேரையூர் பகுதியில் பகல், இரவு நேரங்களில் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
இதேபோல் பகலில் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுவதால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பணிக்குச் செல்லும் பணியாளர்கள் சிரமப்படுகின்றனர்.
பேரையூர் பகுதி கிராமப் பகுதிகளில் மாலை நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால், இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் மறுநாள் காலை 10:00 மணிக்கு மேல்தான் மின்சாரம் விநியோகமாகிறது. இதனால் கிராமப்புற பகுதிகளிலும் மின்தடையால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். மின்வாரிய அதிகாரிகள் மின்சாரத்தை சீராக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.