தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/பள்ளி மாணவர் இறந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., க்கு மாற்றம்

பள்ளி மாணவர் இறந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., க்கு மாற்றம்

பள்ளி மாணவர் இறந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., க்கு மாற்றம்


UPDATED : அக் 10, 2026 01:21 AM

ADDED : அக் 10, 2026 01:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 01:21 AM ADDED : அக் 10, 2026 01:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை கூடல் நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி, யோக லட்சுமி தம்பதி மகன் தமிழ்ச்செல்வன் 16. பிளஸ் 1 மாணவரான இவர், செப்., 6ம் தேதி நண்பர்களுடன் விளையாட சென்றவர் மாயமானார்.

மறுநாள் அப்பகுதி குட்டையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். டியூஷன் படிக்கும் போது மாணவி ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்ட பின்னணியில் மாணவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் கமிஷனர் ராஜேந்திரன் பரிந்துரையை ஏற்று மாணவர் இறந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., க்கு மாற்றி டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us