ADDED : செப் 20, 2026 08:11 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை கே.எல்.என்., கலை அறிவியல் கல்லுாரியில் தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் சங்கம் சார்பில் மண்டல அளவிலான இளைஞர் வானியல் மற்றும் அறிவியல் மாநாடு நடந்தது.
செயலாளர் கணேஷ், பொருளாளர் சிவபிரசாத், பூர்ணிமா, மன்ற பொதுச் செயலாளர் மனோகர் தொடங்கி வைத்தனர். பெங்களூரு இந்திய வானியல் நிறுவன விஞ்ஞானி கிறிஸ்பின் கார்த்திக் மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கினார். மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு அஸ்ட்ரானமி, அறிவியல் சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்தன.
