நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மன்னர் கல்லுாரியில் கணினி பயன்பாட்டு, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு துறைகள் சார்பில் 'டெக் கேம்பஸ் 2026' என்ற அறிவியல் கண்காட்சி நடந்தது.
முதல்வர் ராம சுப்பையா தலைமை வகித்தார். கவுரவ தலைவர் ராஜகோபால், தலைவர் விஜயராகவன் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார். இயக்குநர் பிரபு, மாணவர் நலன் முதன்மையர் அழகேசன் உள்ளிட்டோர் பேசினர். மாணவர்கள் உருவாக்கிய டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ், எம்பெடெட் சிஸ்டம்ஸ், ரோபோட்டிக்ஸ், தானியக்கம், மின் வாகன தொழில்நுட்பம் உட்பட பல்வேறு படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. செயற்கை நுண்ணறிவு துறைத் தலைவர் வாசுகி ஒருங்கிணைத்தார். பேராசிரியர்கள் அமுதா, விஜயலட்சுமி, விஷ்ணுபிரியா, சுதர்சன் ஏற்பாடு செய்திருந்தனர்.

