நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் கல்வித்துறையின் அறிவியல் இயக்கம் வானவில் மன்றம் சார்பில் அனுப்பானடியில் அறிவியல் திருவிழா நடந்தது. ஆசிரியர் பஞ்சபாண்டி துவக்கி வைத்தார். அறிவியல் மன்ற செயற்குழு உறுப்பினர் ராஜவடிவேல் தலைமை வகித்தார். வானவில் மன்ற கருத்தாளர் ஆதிலட்சுமி செய்முறை விளக்கம் அளித்தார். ஆசிரியர்கள் கனகராஜ், மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதுரை மேற்கு ஒன்றியம் சிக்கந்தர் சாவடி வானவில் மன்றம் அறிவியல் திருவிழா தலைவர் ஹரிபாபு தலைமையில் நடந்தது. செயலாளர் ஒச்சுக்காளை விழா நோக்கம் குறித்து பேசினார். ஓய்வு டி.எஸ்.பி., பேனா மனோகரன் சிறப்புரையாற்றினார். சாவடி பள்ளி ஆசிரியர்கள் காவேரி, பஞ்சவர்ணம், யாழினி உள்ளிட்டோர் பங்கேற்றனர். வானவில் மன்ற கருத்தாளர் கார்த்திக் பிரியா ஏற்பாடு செய்தார். மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.