ADDED : ஜன 31, 2026 06:31 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 17வது அறிவியல் ஆலோசனை குழு கூட்டம் நடந்தது. வேளாண்மை பல்கலை விரிவாக்க கல்வி இயக்குநர் முருகன் தலைமை வகித்தார்.
வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குனரக இயக்குநர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார்.
மதுரை வேளாண்மை கல்லுாரி ஆராய்ச்சி நிலைய உழவியல் துறைத்தலைவர் ராகவன் நெல், கரும்பு தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கினார்.
சமுதாய அறிவியல் கல்லுாரி ஆராய்ச்சி நிலைய டீன் காஞ்சனா, வேளாண்மை இணை இயக்குநர் முருகேசன் கலந்து கொண்டனர்.
