ADDED : மார் 20, 2024 06:16 AM
உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே உள்ளது அய்யனார்குளம். இந்த கிராமத்திற்கு பல்வேறு வழிகளில் கிடைக்கும் ஊர் பொது பணத்தை மொத்தமாக கிராமச் சாவடியில் உள்ள இரும்பு பெட்டியில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
சில ஆண்டுகளாக தொடர்ந்து சேகரித்து வந்துள்ள ரூ.40 லட்சத்திற்கும் மேலாக இருக்கும் என கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.
நேற்று கிராமத்தைச் சேர்ந்த சிலர் அவசர போலீஸ் தொடர்பு எண் 100ஐ தொடர்ந்து பலமுறை தொடர்பு கொண்டு இரும்பு பெட்டியில் உள்ள பணத்தை எடுத்து லோக்சபா தேர்தலுக்கு செலவு செய்ய உள்ளனர் என புகார் தெரிவித்தனர்.
இரவு 7.00 மணியளவில், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி ரவிச்சந்திரன், தாசில்தார் சுரேஷ் பிரடரிக் கிளமண்ட், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேரில் சென்று கிராமத்தினர் முன்னிலையில் சாவடியில் உள்ள இரும்பு பெட்டிக்கு சீல் வைத்தனர்.

