/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இடைநிலை ஆசிரியர்கள் சம்பள உயர்வு: தீர்வுகாண வலியுறுத்தல்
/
இடைநிலை ஆசிரியர்கள் சம்பள உயர்வு: தீர்வுகாண வலியுறுத்தல்
இடைநிலை ஆசிரியர்கள் சம்பள உயர்வு: தீர்வுகாண வலியுறுத்தல்
இடைநிலை ஆசிரியர்கள் சம்பள உயர்வு: தீர்வுகாண வலியுறுத்தல்
ADDED : நவ 04, 2025 04:20 AM
மதுரை:  'கல்வித்துறையில் 19 ஆண்டுகளாக சம்பள உயர்வு பிரச்னையில் சிக்கித் தவிக்கும் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு விரைவில் தீர்வு ஏற்படுத்த வேண்டும்' என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
இக்கூட்டணி செயலாளர் சீனிவாசன் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் 1988 முதல் 2005 வரை மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக சம்பளம் பெற்றனர்.
2006 ஜன.,1முதல் சம்பள உயர்வில் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் 1999 ஜனவரி முதல் 2005 மே வரை நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு தற்போது வரை கிரேடு பே (ரூ.2800ல்) எவ்வித உயர்வும் வழங்கப்படவில்லை.
இப்பிரச்னையை களையும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவை (அரசாணை: 90) நிதித்துறை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து திருத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் 19 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தீர்வு கிடைக்கும். தமிழக அரசு இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

