sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 குன்றத்து கோயிலில் பிரதமர் தரிசனம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

/

 குன்றத்து கோயிலில் பிரதமர் தரிசனம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

 குன்றத்து கோயிலில் பிரதமர் தரிசனம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

 குன்றத்து கோயிலில் பிரதமர் தரிசனம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்


ADDED : மார் 01, 2026 06:31 AM

Google News

ADDED : மார் 01, 2026 06:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: -திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலை பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்ய வருகிறார். அதற்காக அனைத்து துறையினரும் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

பிரதமர் மோடி மாலை 4:00 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகிறார்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவதற்காக சில தினங்களுக்கு முன் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் கோயிலுக்கு வந்தனர். இரண்டு நாட்களாக அவர்கள் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு பராமரிப்பு பணிகளை செய்ய வலியுறுத்தினர். கோயிலில் பல்வேறு இடங்களில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டன.

கோயில் சார்பில் அனைத்து மண்டபங்களிலும் வாட்டர் வாஷ் உட்பட தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

வெடிகுண்டு நிபுணர்கள் கோயிலில் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு நாட்களாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலத்த பரிசோதனைக்கு பின்பு அனுமதிக்கப்படுகின்றனர்.

கோயிலுக்குள் உள்ள அனைத்து இரும்பு தடுப்புகளும் அகற்றப்பட்டன. உயரமான படிக்கட்டுகளில் பலகைகளால் சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது. மூலவர்கள் திருமேனிகளின் பின்புற முள்ள மலைப்பாறையில் பச்சைக் கற்பூரம், மஞ்சள், வசம்பு கலவை சாத்துப்படி செய்யப்பட்டுள்ளது.

கோயில் துாண்களில் உள்ள சுவாமி கற் சிலைகளில் எண்ணெய்காப்பு சாத்துப்படி செய்யப்பட்டுள்ளது. கோயில் வாசல் முதல் மூலஸ்தானம் வரை சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கலெக்டர் பிரவீன் குமார் போலீஸ் கமிஷனர் லோகநாதன் மாநகராட்சி கமிஷன் சித்ரா நேற்று காலை கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

வாகன ஒத்திகை மதுரை விமான நிலையத்திலிருந்து சுப்பிரமணிய சுவாமி கோயில் வரையிலும், கோயிலில் இருந்து பொதுக்கூட்டம் நடக் கும் இடம், அங்கிருந்து விமான நிலையம் வரை வாகன ஒத்திகை நடந்தது. 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் பங்கேற்றன.

நடைதிறப்பு நேரம் மாற்றம் இன்று மதியம் 12:00 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு, பிரதமர் சுவாமி தரிசனம்முடித்து சென்ற பின் மாலை 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.






      Dinamalar
      Follow us