ADDED : நவ 29, 2024 06:21 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மாநகராட்சி ஈ.வெ.ரா. பெண்கள் பள்ளி என்.எஸ்.எஸ்., திட்ட முகாமில் இளம் மக்கள் இயக்கம் சார்பாக மாணவிகள் மூலம் 200 மஞ்சள் பைகள் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
ஆயிரம் விதைப்பந்துகள் மாணவிகளால் அழகர்கோவில் மலைப்பகுதியில் துாவப்பட்டன. குப்பை அகற்றப்பட்டது. பள்ளியின் என்.எஸ்.எஸ்., பொறுப்பாளர் முத்துமணி உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இயக்க தலைவர் சோழன் குபேந்திரன் செய்திருந்தார்.
