ADDED : மார் 14, 2026 06:12 AM
மதுரை: கருமாத்துாரில் உள்ள மதுரை மாவட்ட தென்னை மற்றும் இதர பயிர்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் செயல்படும் விதை சுத்திகரிப்பு நிலையத்தை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி ஆய்வு செய்தார்.
அவர் கூறுகையில்,''வேளாண் வணிகத்துறையின் மூலம் விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நிலையத்தில் உள்ள இயந்திரம் சரிசெய்யப்பட்டு மீண்டும் ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையத்தில் ரபி பருவத்தில் அறுவடையான 8 டன் நெல் விதைகள் சுத்திகரிக்கப்பட்டுள்ளது. குறைந்த செலவில் சுத்திகரிப்பு செய்யப்படுவதால் விதைப்பண்ணை விவசாயிகளும் பயன்பெறுகின்றனர்'' என்றார்.
வேளாண் துறை துணை இயக்குநர் மேரி ஐரின் ஆக்னட்டா, செல்லம்பட்டி உதவி இயக்குநர் செல்வராஜ், வேளாண் அலுவலர் சுந்தர பாண்டியன், விதைச்சான்று அலுவலர் விஜயகுமார், உதவி விதை அலுவலர் ராமன் கலந்து கொண்டனர்.
