ADDED : ஆக 05, 2025 07:10 AM
மதுரை : திருச்சி டி.ஐ.ஜி., வருண்குமார். மற்றும் குடும்பத்தினர் பற்றி அவதுாறாக கருத்து வெளியிட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி (ஜெ.எம்.,4) நீதிமன்றத்தில் வருண்குமார் வழக்கு தொடர்ந்தார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்து வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் அந்நீதிமன்றத்தில் மனு செய்தார். அதை நீதிமன்றம் நிராகரித்தது.
அந்நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சீமான் மனு தாக்கல் செய்தார். ஜூலை 2ல் தனி நீதிபதி, 'திருச்சி நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து' உத்தரவிட்டார். நீதிபதி எல்.விக்டோரியா கவுரி நேற்று விசாரித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ராமமூர்த்தி ஆஜரானார். வருண்குமார் தரப்பு வழக்கறிஞர் ஜெகதீஷ்பாண்டியன் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். நீதிபதி இடைக்காலத் தடையை நீட்டித்து ஆக.,12க்கு ஒத்தி வைத்தார்.

