UPDATED : அக் 11, 2026 06:42 PM
ADDED : அக் 11, 2026 06:38 PM
அ நிறம் | அளவு
பேரையூர்: ‘டி.கல்லுப்பட்டி பகுதியில் வெள்ளரி சீசன் துவங்கி உள்ளதால் விற்பனை அதிகரித்து விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
டி.கல்லுப்பட்டி பகுதியில் வெள்ளரி சாகுபடி அதிக அளவில் உள்ள நிலையில், தற்போது அதன் விற்பனையும் அதிகரித்துள்ளது. பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வெயிலின் தாக்கத்தை குறைக்க வெள்ளரிப் பிஞ்சுகள் அமோகமாக விற்பனை ஆகிறது. இதனால் வெள்ளரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆறு வெள்ளரிப்பிஞ்சுகள் கொண்ட கட்டு ஒன்று, ரூ. 20 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளரி சாப்பிட்டால் உடல் நலத்திற்கு சிறந்த உணவாக, உடலுக்கு குளிர்ச்சி தருவதாக உள்ளதால் மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.
