ADDED : பிப் 26, 2026 06:11 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதி பிரிவு கணினி அறிவியல் துறை சார்பில் சி பிளஸ் பிளஸ் கருத்துக்கள் மற்றும் நடைமுறைப் பயிற்சிகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
பொறியாளர்கள் மேகஸ்ரீ, சவுமியா பேசினர். கல்லுாரித் தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர், முதல்வர் ராமசுப்பையா, சுயநிதி பிரிவு இயக்குனர் பிரபு பங்கேற்றனர். கணினி அறிவியல் துறைத்தலைவர் கார்த்திகா, உதவி பேராசிரியர்கள் பாலப்ரியா, மதுமிதா ஒருங்கிணைத்தனர்.
