ADDED : செப் 06, 2026 07:03 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரியில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாடுகள் குறித்த தேசிய ஆன்லைன் கருத்தரங்கு நடந்தது.
செயலாளர் இக்னேசியஸ் மேரி, முதல்வர் பாத்திமா மேரி முன்னிலை வகித்தனர். மணிப்பூர் தேசிய தொழில்நுட்பக் கழக பேராசிரியர் நாகராஜன், ஏற்றுமதி ஆலோசகர் சேதுராமன் சாத்தப்பன், பெங்களூரு பல்கலை பேராசிரியர் சுதாகர் விஜயகுமார், ஆச்சாரியா தொழில்நுட்ப நிறுவன துறைத் தலைவர் அபிஷேக் வெங்கடேஸ்வர், டில்லி அறிவியல் தொழில்நுட்பத் துறை முன்னாள் ஆலோசகர் சஞ்சீவ்குமார் வர்ஷ்னி, ஹைதராபாத் கல்லுாரி பேராசிரியர் நாகுநுாரி சீனிவாஸ் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
நிறைவு நாளில் பேராசிரியர்கள் மாலதி, ஆஷா, கார்த்திகா, மீனாட்சி சுந்தரி, ஷியாமளா, ஜெயஷீலி, பரமேஸ்வரி பங்கேற்றனர். பேராசிரியர்கள் சுகன்யா, ராகம் தொகுத்து வழங்கினர்.
