ADDED : அக் 14, 2024 03:58 AM
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப்பிரிவு ரோட்ராக்ட் கிளப், தியாகராசர் கலைக்கல்லுாரி ரோட்ராக்ட் கிளப், ரோட்டரி இன்டர்நேஷனல், மதுரை மாவட்ட ரோட்ராக்ட் ஆர்கனேசேஷன் சார்பில் 'யுவா மதுரை 5.0' சிறப்பு கருத்தரங்கு நடந்தது.
கல்லுாரி செயலாளர் விஐயராகவன் தலைமை வகித்தார்.
முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப்பிரிவு இயக்குநர் பிரபு முன்னிலை வகித்தனர். மாணவ தலைவர் கிருத்திக் ராஜ் வரவேற்றார். ரோட்டரி இண்டர்நேஷனல் மாவட்ட ஆளுனர் ராஜா கோவிந்தசாமி பேசினார்.
ரோட்ராக்ட் நிர்வாகிகள் ஞானகுகன், சண்முகவேல், விக்னேஸ்வரன், கவுசல்யாதேவி, ஒருங்கிணைப்பாளர்கள் கோதைகனி, சிவக்குமார் பங்கேற்றனர்.
மதுரை ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் சரவணன்ராஜ், டாக்டர் ஆஷா கலந்துரையாடினர். மாணவ செயலாளர் நித்தீஸ்வரன் நன்றி கூறினார், ரோட்ராக்ட் கிளப் மாணவ தலைவர் கிஷோர், செயலாளர் பாஷித், பொருளாளர் தாட்சாயினி, ரோட்ராக்ட் கிளப் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் குமார் ஒருங்கிணைத்தனர்.