ADDED : மார் 01, 2024 06:43 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் யாதவா கல்லுாரி வரலாற்று துறை மாணவர்களுக்கு கருத்தரங்கு, காந்திய சிந்தனை தொடர்பான கேள்வி பதில் நிகழ்ச்சி நடந்தது. மாணவி வைஷ்ணவி வரவேற்றார்.
மியூசிய செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். ஜப்பான் புத்த சமய நிப்பான்சான் மியோகோஜியின் தமிழ்நாடு பிரிவு அறங்காவலர் புத்த போக்கின் லீலாவதி முன்னிலை வகித்தார்.
கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், பேராசிரியர்கள் விவேக், விமலா, ஜான்சி பங்கேற்றனர். மாணவி ஜனனி நன்றி கூறினார். மாணவர்கள் வளாகத்தை சுத்தம் செய்தனர். வரலாற்றுத் துறை தலைவர் ஜெயபாலன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
