நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை டி.கல்லுப்பட்டி கே.ஆர்., கலை அறிவியல் கல்லுாரியில் நுகர்வோர் உரிமைகள், கடமைகள் குறித்து தாளாளர் பாண்டியராஜன் தலைமையில் கருத்தரங்கு நடந்தது.
வழக்கறிஞர் குமரகுருபரன், நுகர்வோர் சட்ட திருத்தங்கள், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பல்வேறு நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள், அதன் மூலம் நுகர்வோர் பெற்ற பலன்களை விவரமாக எடுத்துரைத்தார்.
முதல்வர் செந்தில்குமார் வழிகாட்டுதல்படி வணிகவியல் துறையினர் ஏற்பாடுகளை செய்தனர்.

