திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வணிகவியல் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் 'இளம் நிபுணர்களுக்கான அத்தியாவசிய திறன்களை வழிநடத்துவது' என்ற தலைப்பில் இணைய வழியில் மென் திறன் கருத்தரங்கு நடந்தது. செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், முதல்வர் ராம சுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். மாணவி ஆரோக்கிய பிரிசிலா வரவேற்றார்.
உதவிப் பேராசிரியர் கீர்த்திகா அறிமுக உரையாற்றினார். சென்னை சவிதா சட்டப் பள்ளி உதவிப் பேராசிரியர் மீனாட்சி தகவல் தொடர்பு திறன், முடிவெடுத்தல், குழுப்பணி, சிக்கலை தீர்க்கும் திறன், நுண்ணறிவு, தன்னம்பிக்கை, திறன்களை வளர்த்து கொள்வது குறித்து விளக்கம் அளித்தார். மாணவி விஷாலி நன்றி கூறினார். வணிகவியல் தகவல் தொழில்நுட்ப துறைத் தலைவர் நாகசுவாதி, பேராசிரியர்கள் இளம்பிறை, சண்முகப்ரியா, கீர்த்திகா ஒருங்கிணைத்தனர்.

