/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சேது பொறியியல் கல்லுாரி விருது விழா
/
சேது பொறியியல் கல்லுாரி விருது விழா
ADDED : டிச 21, 2025 05:17 AM
மதுரை: மதுரை அருகே சேது பொறியியல் கல்லுாரியில் 'சேது சைனிங் ஸ்டார்' விருது விழா நடந்தது.
ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகளுக்கான 'ஹேக்கத்தான்' விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. கல்லுாரி தலைவர் முகமது ஜலீல் தலைமை வகித்தார். முதல்வர் சிவக்குமார் வரவேற்றார்.
தேசிய அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்று ரூ.1.50 லட்சம் பரிசு பெற்ற மாணவர்கள்,இ.டி.ஐ.ஐ.,போட்டிகளில் ரூ.3லட்சம் பெற்ற மாணவர்கள், ரூ.7.50 லட்சம் பரிசு பெற்ற பேராசிரியர்கள் என 280 மாணவர்கள், 45 பேராசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
நிர்வாக அதிகாரிகள் சீனி முகைதீன், சீனி முகமது அலியார், நிலோபர் பாத்திமா, நாசியா பாத்திமா, டீன் ஷாநவாஸ், தேர்வு கட்டுப்பாட்டு துறை தலைவர் முரளி கண்ணன்ஆகியோர் பங்கேற்றனர். தகவல் தொடர்புத்துறை தலைவர் புனிதா நன்றி கூறினார்.

