ADDED : செப் 27, 2026 02:40 AM

மதுரை: மதுரை சேது தொழில்நுட்பக் கல்லுாரி பட்டமளிப்பு விழா நிறுவனர் முகமது ஜலில் தலைமையில் நடந்தது. முதல்வர் சிவக்குமார் விழா அறிக்கையை சமர்ப்பித்தார். நிர்வாக அதிகாரிகள் சீனி முகைதீன், சீனி முகமது அலியார் மரைக்காயர், நிலோபர் பாத்திமா, நாஸியா பாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எக்ஸாவேர் மென்பொருள் நிறுவன தலைவர் கிருஷ்ணா பாலகுருநாதன் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசுகையில், ''வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப உலகில் தொடர் கற்றலே வளர்ச்சியை தரும். திறமைக்கு இணையாக நேர்மை, பொறுப்பு, அர்ப்பணிப்பு, ஒழுக்கம் ஆகியவையும் அவசியம். சிறந்த பணிநெறி, தொழில்நுட்ப திறன்களுடன் மற்றவர்களோடு தொடர்பு கொள்ளும் திறனையும் வளர்த்துக் கொள்வதே வெற்றிக்கு அடித்தளம். பட்டம் என்பது கனவுகளை நனவாக்கும் புதிய பயணத்தின் தொடக்கம். சவால்கள், தோல்விகளை நேர்மறை எண்ணத்துடன் எதிர்கொண்டால் மகிழ்ச்சியுடன் கூடிய வெற்றியை பெறலாம்'' என்றார்.
இளங்கலையில் 950 பேர், முதுகலையில் 57 பேர் என 1007 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
பெங்களூரு டி.சி.எஸ்., வாகனத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு தொழில்நுட்ப வழிகாட்டி ராஜபாண்டியன் ராமமூர்த்தி, தேர்வுத்துறை தலைவர் முரளி கண்ணன், ஐ.கியூ.ஏ.சி., டீன் சிவரஞ்சனி, அகாடமிக் டீன் ஷாநவாஸ் உட்பட துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
