/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குடிநீரில் கலக்கும் கழிவுநீர் கொடிக்குளத்தில் முகம் சுளிப்பு
/
குடிநீரில் கலக்கும் கழிவுநீர் கொடிக்குளத்தில் முகம் சுளிப்பு
குடிநீரில் கலக்கும் கழிவுநீர் கொடிக்குளத்தில் முகம் சுளிப்பு
குடிநீரில் கலக்கும் கழிவுநீர் கொடிக்குளத்தில் முகம் சுளிப்பு
ADDED : மே 05, 2025 04:45 AM
மதுரை : மதுரை மாநகராட்சி வார்டு 10ல் கொடிக்குளம் 2ம் தெருவில் பாதாள சாக்கடை கழிவுநீர் அடிக்கடி வெளியேறி குடிநீருடன் கலப்பதால் பயன்படுத்தும் மக்கள் முகம் சுளிக்கின்றனர்.
இத்தெருவில் சமீபகாலமாக குடிநீர் பிரச்னையும், கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. தெருவின் அனைத்து வீடுகளுக்குமான பாதாளச் சாக்கடைக்கு இந்த தெருவின் கடைசியில் இணைப்பு உள்ளது. இதில் இருந்து வாரம் ஒருமுறை கழிவுநீர் கசிந்து வெளியேறுகிறது.
மாநகராட்சியில் புகார் செய்தால் கண்துடைப்பாக சரிசெய்கின்றனர். இதுகுறித்து கேட்டால், ஊழியர்கள் அலட்சியமாக பதிலளிக்கின்றனர். கழிவுநீர் கலப்பதால் தொட்டியில் குடிநீரைப் பிடிக்க முடியாமல் குடியிருப்போர் தவிக்கின்றனர்.
தொட்டியும் பாசி படர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. வேறு வழியின்றி மக்கள் அடுத்த தெருவுக்குச் சென்று தொட்டியில் குடிநீர் பிடிக்கின்றனர்.
குடிநீர் தொட்டி குழாயில் நீர் கசிந்துகொண்டே இருப்பதால், நீர் நிறைந்து ரோட்டில் ஓடுகிறது. வடிகால் வசதி அமைத்தால் ரோட்டில் தேங்கும் நீர் வெளியேறும். அவ்வாறு இல்லாததால் நோய்த்தொற்றால் குழந்தைகள், முதியோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதாளச் சாக்கடை பிரச்னையை தீர்த்தால் மட்டுமே குடிநீரை பயன்படுத்த முடியும். மாநகராட்சியின் விரைந்த நடவடிக்கை அவசியம்.

