sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் கழிவுநீர் தேக்கம் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

/

 மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் கழிவுநீர் தேக்கம் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

 மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் கழிவுநீர் தேக்கம் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

 மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் கழிவுநீர் தேக்கம் நோய் தொற்று ஏற்படும் அபாயம்


ADDED : மார் 03, 2026 05:58 AM

Google News

ADDED : மார் 03, 2026 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் வளாகத்திற்குள்குடிநீருடன் கழிவுநீர் கலந்து உட்புகுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. முறையான வடிகால் வசதியை கட்டமைக்க வியாபாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

2010ல் தொடங்கப்பட்ட இம்மார்க்கெட்டில் இதுவரை தரமான ரோடு வசதி இல்லாததால் மழை காலங்களில் நடந்து செல்ல முடியாத வகையில் மார்க்கெட் வளாகம்சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. கழிப்பறை,காய்கறி கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவதற்கான வசதிகள் இல்லை.

ஆங்காங்கே கொட்டப்படும் கழிவுகளைகால்நடைகள் உண்பதும், துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. கொட்டப்படும் கழிவுகளால் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு வளாகத்திற்குள் கழிவுநீர் தேங்குகிறது.

தற்போது மார்க்கெட் அருகே கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ்12 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.வால்வு பழுதால்நேற்றுமுன்தினம் இரவு 11:00 மணிக்கு இதிலிருந்து குடிநீர் வீணானது.

முறையான வடிகால் வசதி இல்லாததால் உபரி நீர் மார்க்கெட் வளாகத்தில் கழிவுநீருடன் வெளியேறியது. இதனால் கடைகள் முன்பு குளம் போல் கழிவுநீர் தேங்கியது. அண்ணாநகர் பகுதி வால்வு பழுதால் தண்ணீர் வெளியேறியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்ட்ரல் மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் சின்னமாயன் கூறியதாவது: இப்பகுதி நீர்த்தேக்க தொட்டி நிரம்பினால் உபரி நீரை திறந்த வெளியில் விடுகின்றனர். இது மார்கெட்டுக்குள் உள்ள பாதாள சாக்கடை வழியாக வெளியேறிகாய்கறி கமிஷன் கடைகள் முன்பு தேங்குகிறது. காய்கறி மூடைகள் கழிவுநீரில் மிதப்பதால் நோய் தொற்று அபாயம் ஏற்படுகிறது.

நேற்று முன்தினம் தேங்கியகழிவுநீரை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். வாரம் இருமுறைஇப்பிரச்னை ஏற்படுவதால்உபரி நீரை குழாய்கள் மூலம் கழிவுநீர் கால்வாயில்முறையாக இணைத்து, நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us