/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தையல், அலைபேசி பழுதுநீக்க பயிற்சி
/
தையல், அலைபேசி பழுதுநீக்க பயிற்சி
ADDED : ஜன 09, 2026 06:20 AM
மதுரை: மதுரை எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப வளர்ச்சி நிலைய விரிவாக்க மையத்தில் ஒரு மாத கால தையல் பயிற்சி, அலைபேசி பழுதுநீக்க இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
பெண்களுக்கான தையல் பயிற்சியில் அடிப்படை தையல் நுணுக்கங்கள், கவுன், ஜாக்கெட், சுரிதார், நைட்டி, பாவாடை தைக்க கற்றுத்தரப்படும். அலைபேசி பழுதுநீக்கப் பயிற்சியில் 'டூல்ஸ் கிளாஸ், ஓ.எஸ் அப்டேட், அசம்பிளிங்க், பேட்டரி, டிஸ்பிளே, மதர்போர்டு' உட்பட பல்வேறு பயிற்சிகள் செய்முறை விளக்கத்துடன் அளிக்கப்படும். குறைந்தது 8வது தேர்ச்சி பெற்ற 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம்.
போட்டோ, கல்விச்சான்றிதழ் நகலுடன் அணுக வேண்டிய முகவரி: எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப வளர்ச்சி அலுவலக விரிவாக்க மையம், சிட்கோ தொழிற்பேட்டை 3வது நுழைவு வாயில், மாட்டுத்தாவணி, மதுரை. முன்பதிவு : 70100 41455.

