ADDED : ஏப் 21, 2026 10:54 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் மலையாளம் கிருஷ்ணய்யர் வேத பாடசாலையில் சங்கரஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
குருவந்தனம், விக்னேஸ்வரர் பூஜை, புண்யாக வாசனம், தியான, ஆவாஹன, சோடஷ உபசாரங்கள், வேதபாராயணம், யாகசாலை பூஜைகள், தோடகாஷ்டகம், மஹாதீபாராதனை நடந்தது. ஆதிசங்கரரின் உருவப்படம் ஒற்றை, இரட்டை அக்ரஹாரங்களில் பவனி வந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. அத்யாபகர் வரதராஜப் பண்டிட்ஜி தலைமையில் பூஜைகள் நடந்தன. ஹரிஷ் ஸ்ரீநிவாசஐயர் ஏற்பாடுகளை செய்தார்.
