ADDED : மார் 21, 2026 07:14 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: மேலக்காலில் இறந்த ஆடுகள் ரோட்டோரத்தில் வீசப்பட்டதால் அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர்.
இங்கு மேலக்கால், செக்கானுாரணி ரோட்டில் நாகமலை கணவாய் பகுதியில் 20க்கும் மேற்பட்ட ஆடுகளின் உடல்கள் ஆங்காங்கே வீசப்பட்டன. சில உடல்கள் நாளானதால் அழுகின. அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு நிலவியது.
வருவாய் அதிகாரிகள் கால்நடை மருத்துவ ஆய்வுக் குழுவினருக்கு தகவலளித்தனர். அவர்கள் ஆய்வு செய்ததில், 'ஆடுகள் ஒரே நேரத்தில் வீசப்படவில்லை.
குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் வீசப்பட்டுள்ளன. இதனால் சில ஆடுகள் அழுகியும், சில புதியதாகவும் உள்ளன' எனத் தெரிய வந்தது. திட்டமிட்டு செய்யப்பட்டதா, வேறு ஏதேனும் காரணமா என வருவாய், ஊராட்சி அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
