/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தமுக்கத்தில் நாளை ஷாப்பிங் திருவிழா
/
தமுக்கத்தில் நாளை ஷாப்பிங் திருவிழா
ADDED : டிச 26, 2025 06:05 AM
மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மதுரை எகனாமிக் சேம்பர் சார்பில் மூன்று நாள் ஷாப்பிங் திருவிழா நாளை (டிச.27) தொடங்கி டிச.,29ல் நிறைவு பெறுகிறது.
சங்கத்தலைவர் ஜெகதீசன், எகனாமிக் சேம்பர் முகமதுகான் கூறியதாவது: ஷாப்பிங் திருவிழாவை நாளை காலை 11:00 மணிக்க வைகை அக்ரோ புட்ஸ் நிர்வாக இயக்குநர் நீதிமோகன் துவக்கி வைக்கிறார். அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையில் 200க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம்பெறுகின்றன. உணவகம், சிறுவர்களுக்கான விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட உள்ளன.
அனுமதி சீட்டு எண்களின் அடிப்படையில் தினமும் 4 முறை குலுக்கல் நடத்தி பரிசு வழங்கப்படும். தினசரி 48 பரிசுகளும், பள்ளி மாணவர்களுக்கு கட்டாய பரிசுகளும் உண்டு. நிறைவு நாளில் பம்பர் பரிசாக பிரிட்ஜ் வழங்கப்படுகிறது. பொருட்காட்சியை தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம். இவ்வாறு கூறினர்.

