ADDED : செப் 11, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: இமானுவேல்சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்த உசிலம்பட்டி மற்றும் தேனி மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் சென்றனர். ஆண்டிபட்டி கணவாய் மலைப்பகுதியில் பொருளாதார குற்றத்தடுப்பு எஸ்.பி., சரவணக்குமார் தலைமையில் போலீசார் தேனி மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்களை சோதனை செய்து அனுப்பினர்.
உசிலம்பட்டியில் நகரில் தேனி, மதுரை ரோட்டில் கிராம மற்றும் நகர்பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், டீக்கடை உள்பட ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் காலையிலேயே கடைகளை அடைக்கும்படி போலீசார் உத்தரவிட்டனர். இந்த ரோடுகளில் இடையூறு இன்றி வாகனங்கள் செல்லும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
