sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற கடைகளுக்கு  அபராதம் ரூ.5 கோடி: சங்கேத வார்த்தையுடன் விற்பனை செய்யும் கும்பல்

/

தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற கடைகளுக்கு  அபராதம் ரூ.5 கோடி: சங்கேத வார்த்தையுடன் விற்பனை செய்யும் கும்பல்

தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற கடைகளுக்கு  அபராதம் ரூ.5 கோடி: சங்கேத வார்த்தையுடன் விற்பனை செய்யும் கும்பல்

தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற கடைகளுக்கு  அபராதம் ரூ.5 கோடி: சங்கேத வார்த்தையுடன் விற்பனை செய்யும் கும்பல்

2


ADDED : ஜன 22, 2026 05:37 AM

Google News

ADDED : ஜன 22, 2026 05:37 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: உணவுப்பாதுகாப்புத்துறை, காவல்துறை சார்பில் 2 ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் நடத்திய ஆய்வில், தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் 7620 கிலோ கைப்பற்றப்பட்டு ரூ.5 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் டீக்கடை, பெட்டிக்கடை, கிராமங்களில் உள்ள சிறு மளிகைக்கடை உரிமையாளர்களில் சிலர், குட்கா, பான்பராக் போன்ற தமிழக அரசு தடை செய்த புகையிலைப் பொருட்களை விற்கின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு இப்பொருட்கள் விற்கப்படுவதால் 2023 நவம்பரில், காவல்துறையும், உணவுப்பாதுகாப்புத் துறையும் இணைந்து குழுக்களை அமைத்தன. மதுரை மாவட்டத்தில் 19 குழுக்கள் மூலம் தொடர்ந்து கடைகள் ஆய்வுசெய்யப்படுகின்றன.

ரூ.5 கோடி அபராதம் இதுவரை 95 ஆயிரத்து 781 கடைகளில் ஆய்வு செய்ததில் 1598 கடைகளில் இருந்த 7620 கிலோ புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதற்காக ரூ.5 கோடியே ஒரு லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை 68 ஆயிரத்து 114 கடைகளை ஆய்வு செய்ததில் 408 கடைகளில் இருந்த 1985 கிலோ புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் ரூ.ஒரு கோடியே 37 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்கிறார் உணவுப்பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சிவராமபாண்டியன்.

அவர் கூறியதாவது: பெட்டிக்கடைகளில் புகையிலைப் பொருட்கள் இருப்பது முதல்முறை கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் 15 நாட்கள் கடையடைக்க உத்தரவிடப்படும். இரண்டாவது முறை பிடிபட்டால் ரூ.50 ஆயிரத்துடன் ஒரு மாத கடையடைப்பும், மூன்றாம் முறை பிடிபட்டால் ரூ.ஒரு லட்சம் அபராதத்துடன் 90 நாட்கள் கடையடைக்கப்படும்.

விற்பனை முறையில் மாற்றம் கடைகளில் போலீசாருடன் இணைந்து ஆய்வு செய்வதால் தற்போது விற்பனை செய்யும் முறையை விற்பனையாளர்கள் மாற்றியுள்ளனர். வீடுகளில் கழிப்பறைகளில் வைத்து விற்கின்றனர். ரோட்டில் குறிப்பிட்ட சங்கேத வார்த்தை கூறுவோருக்கு டூவீலர்களில் ரோட்டோரம் நின்றும் விற்பனை செய்கின்றனர்.

இதுவரை 98 கிரிமினல் வழக்கு பதியப்பட்டு 9 வழக்குகளில் தீர்ப்பு கிடைத்துள்ளது. உணவுப்பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மூலம் தனியாகவும் கடைகளில் ஆய்வு செய்கிறோம். 2025 ல் கைப்பற்றிய 1950 கிலோ புகையிலைப் பொருட்களை கைப்பற்றினோம்.

போலீசார், மாநகராட்சி அதிகாரிகள், சுகாதாரத்துறை முன்னிலையில் பள்ளம் தோண்டி அதில் கைப்பற்றிய புகையிலைப் பொருட்களை கொட்டி பினாயில், பிளீச்சிங் பவுடர் துாவி அழித்துள்ளோம்.

தமிழக அரசு தடைசெய்துள்ள புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது தெரிந்தால் 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என்றார்.






      Dinamalar
      Follow us