/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எம்.எல்.ஏ.,க்காக காத்திருக்கும் கடைகள்
/
எம்.எல்.ஏ.,க்காக காத்திருக்கும் கடைகள்
ADDED : ஜூலை 08, 2025 01:37 AM

சமயநல்லுார்,: சமயநல்லுார் அருகே மேற்கு ஒன்றியம் கட்டப்புளிநகரில் புதிதாக கட்டிய ரேஷன் கடைபலமாதங்களாகமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் எம்.எல்.ஏ வருகைக்காக காத்திருக்கிறது.
ஜெயபாண்டி கூறியதாவது: இங்குள்ள ரேஷன் கடை, உணவு தானிய கிட்டங்கி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் செலவில் கட்டப்பட்டது. ஏற்கனவே உள்ள ரேஷன் கடை மாரியம்மன் கோயில்இடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. கட்டப்புளி நகர்,டபேதார் சந்தை பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இக்கடையால் பயன் பெறுகின்றனர். பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. இதேபோன்று சிறுவாலை, சமயநல்லுார், பொதும்பு, வாகைகுளம் பகுதிகளில் 8 கடைகள் எம்.எல்.ஏ., வருகைக்காக காத்திருக்கின்றன. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதிகாரிகளிடம் கேட்டபோது, 'எம்.எல்.ஏ., வெங்கடேசன் வருகைக்காக காத்திருக்கிறோம். கூடிய விரைவில் திறக்கப்படும்' என்றனர்.