UPDATED : நவ 16, 2026 07:09 PM
ADDED : நவ 16, 2026 07:04 PM

பாலமேடு: ‘‘வலையபட்டியில் கால்நடைமருத்துவமனை அமைக்க வேண்டும்’’ என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
இப்பகுதியில் ஆடு, மாடு, கோழி உள்பட ஏராளமான கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றுக்கான மருத்துவ உதவிகளுக்கு இப்பகுதியினர் 15 கி.மீ. தொலைவில் உள்ள தெத்துாருக்கு செல்ல வேண்டும். அருகே மருத்துவமனை இல்லாததால் அவசர மருத்துவ உதவிக்கு இப்பகுதியினர் சிரமமடைகின்றனர்.
அப்பகுதி விஜயகுமார் கூறியதாவது: முன்பு பாலமேடு கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தோம். இரு ஆண்டுகளுக்கு முன் எங்கள் பகுதியினருக்கு தெத்துார் மருத்துவமனை ஒதுக்கப்பட்டது. இதனால் நாங்கள் அவசர சிகிச்சைக்கு அங்கு செல்ல வேண்டியிருந்தது.
பல சமயங்களில் அங்கு செல்வதற்குள் கால்நடைகள் இறக்கும் நிலை உள்ளது. அங்கு செல்ல போக்குவரத்துச் செலவு அதிகமாகிறது. இங்கு மருத்துவமனை அமைத்தால் அரசம்பட்டி, சல்லிகோடாங்கிபட்டி, இலக்கம்பட்டி கிராமத்தினர் பயன்பெறுவர், என்றார்.
