ADDED : மார் 20, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை காஞ்சி காமகோடி மடத்தில் காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 6வது வார்ஷிக ஆராதனை மார்ச் 22ல் நடக்க உள்ளது.
காலை 7:00 மணிக்கு குருவந்தனம், விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், மகன்யாசம், புரஸ்சர ருத்ர ஏகாதசி நடக்கிறது. தொடர்ந்து ஸ்ரீ ஜெயேந்திரர் விக்ரகத்திற்கு அபிேஷகம், அலங்காரம் நடக்கும். மாலை 6:30 மணிக்கு பஜகோவிந்தம் தலைப்பில் சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா பேசுகிறார். ஏற்பாடுகளை மடம் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

