ADDED : நவ 09, 2024 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில், ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 300வது மாத உழவாரப்பணி நாளை (நவ. 10) காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடக்கிறது. இக்கோயிலில் 1999 முதல் தற்போது வரை மாதந்தோறும் 2வது ஞாயிற்றுக்கிழமை, இயக்கம் சார்பில் உழவாரப்பணி நடத்தப்படுகிறது.
நாளை நடக்கும் இப்பணியில் ஸ்ரீவில்லிப்புத்துார் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜ சுவாமிகள் பங்கேற்று ஆசியுரை வழங்குகிறார்.