ADDED : மார் 17, 2025 06:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : வாடிப்பட்டி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு கட்டடம் பராமரிப்பின்றி ஓராண்டிற்கு முன் அனைத்து அறைகளிலும் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழத்துவங்கின. இதனால் ஓராண்டாக அருகே உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு அறையில் சித்தா பிரிவு செயல்படுகிறது.
இதன் காரணமாக இப்பிரிவுக்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் இருப்பு வைக்கப்பட்டுள்ள மருந்துகளை எடுக்க ஊழியர்கள் அபாய கட்டடத்திற்குள்தான் செல்ல வேண்டியுள்ளது. சித்த மருத்துவ பிரிவுக்கு புதிய கட்டடம் கட்டவும், அதுவரை வேறு அறைக்கு மாற்றவும் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.