ADDED : பிப் 24, 2026 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் தாலுகா பொன்னமங்கலம் கிராமத்தில் இயங்கி வரும் கல் குவாரிகளால் வாழ்வாதாரம் பாதிப்பதாககூறி சில நாட்களுக்கு முன் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் அதற்கு மாறாக வெடிகள் அதிகம் வெடிக்கப்படுவதாக கூறி நேற்று திருமங்கலம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தாசில்தார் விடுமுறையில் இருப்பதாக அலுவலர்கள் தெரிவித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

