ADDED : செப் 23, 2026 04:42 PM
அ நிறம் | அளவு
மேலுார், செப். 24 -
மேலுார் நகராட்சியில் 27 வார்டுகளை சுத்தப்படுத்த 23 நிரந்தரம், 70 ஒப்பந்த பணியாளர்கள் உள்ளனர்.
இப் பணியாளர்களுக்கு தினமும் ரூ. 416 வீதம் கடந்த ஆகஸ்ட் சம்பளம் இதுவரை வழங்கவில்லை. அதனால் நேற்று துாய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பொறியாளர் முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர் தினேஷ் குமார் உடனே சம்பளம் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பணியாளர்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.
