/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்தில் ரோப்கார் ஒப்பந்தம் கையெழுத்து
/
குன்றத்தில் ரோப்கார் ஒப்பந்தம் கையெழுத்து
ADDED : செப் 26, 2024 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் ரோப்கார் அமைப்பதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
ஹரியானா ஆர்.ஐ.டி. இ.எஸ்., நிறுவனம் ரோப் கார் அமைக்கும் பணியை மேற்கொள்ள உள்ளது. இதற்காக நேற்று முன்தினம் அந்நிறுவனத்தினர் இடங்களை ஆய்வு செய்யும் பணிகளை மேற்கொண்டனர். ரோப்கார் அமைப்பதற்காக அந்நிறுவனமும், கோயில் நிர்வாகமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
துணை கமிஷனர் சுரேஷ், ஆர்.ஐ.டி.இ.எஸ்., பொது மேலாளர் சதீஷ்குமார் வர்மா கையெழுத்திட்டனர். கையெழுத்தான ஒப்பந்த பேப்பர்கள் கோயில் மூலஸ்தானத்தில் சுப்பிரமணிய சுவாமி பாதத்தில் வைத்து பூஜை செய்யப்பட்டது. அடுத்த கட்டமாக பணிகள் விரைவில் துவங்க உள்ளது.

